எத்தனையோ தம்பதிகளை பார்த்து இருக்கேன்,மனைவியை சந்தேகம் படும் புருஷன்
,கணவனுடன் ஒத்து போகாத மனைவி என்று பல வகையினரை பார்த்து இருக்கேன்.எல்லா
கணவன் மனைவிக்குள்ளும் எதோ ஒரு பிரச்னை இருக்கும் அது ஈகோ
வோ,புரிந்துகொள்ளுதலோ என்று.அது போல எல்லா மனிதரிடமும் ஒரு சதவிகிதமாவது
ஒரு தவறு இருக்கும்.
என் தாத்தாவுக்கு வயது 77 ,நான் பார்த்த வரை என் பாட்டியிடம் என் தாத்தா சண்டை போட்டதும் இல்லை,அதிர்ந்து பேசினதும் இல்லை.பொதுவாகவே அன்னைவரிடுமம் பாசமும்,பரிவுமாக இருப்பர்.என் பள்ளி விடுமுறை நாட்கள் அனைத்தும் என் தாத்தா,பாட்டியுடனே இருக்கும். பள்ளியின் கடைசி தேர்வு அன்றே என் தாத்தா வந்துடுவாங்க,என்ன ஊருக்கு கூட்டிட்டு போக.அப்பல்லாம் எங்க பாட்டி வீட்டுல டிவி,புக்ஸ்,ரேடியோன்னு எந்த பொழுது போக்கு சாமான்களும் இருக்காது,இருந்த போதும் அந்த ஒரு மாதம் விடுமுறை கழிவதே தெரியாமல் அவ்ளோ சந்தோஷமாக இருப்பேன்.என் பள்ளி இறுதி ஆண்டு வரை விடுமுறை முடிந்து வரும் போதுலாம் அழுவேன் இன்னும் இருக்க முடியலையேனு.அதற்கு பிறகு நான் விருப்ப பட்டபடியே என் தாத்தா பாட்டியிடமே இருந்து நான் கல்லூரியில் படித்தேன்.நான் கல்லூரியில் கோல்ட் மெடலும்,distinction,best outgoing student போன்ற அனைத்தையும் வாங்கினதற்கு காரணம்,என் தாத்தாவும் பாட்டியும் தான்.என் தாத்தா என்னை தினமும் காலையும் ,மாலையும் படிக்கச் சொல்லுவார்கள்.பரீட்சை நேரங்களில் விடியலில் எழுப்பி விடுவார்கள்(தாத்தா ஹெட் மாஸ்டர் இருந்தவங்க).அதே போல் பரீட்சை முடிந்ததும் என்னை வற்புறுத்தி தோழிகளுடன் திரைப்படம் பார்க்க அனுப்புவார்கள்.என் தாத்தா,பாட்டியிடம் இருந்து நான் அறிந்தது ஏராளம்.
என் திருமணத்தை நடத்தி வைத்ததும் என் தாத்தா பாட்டி தான்.நான் ஒவ்வொரு முறையும் வெளிநாடு சென்ற வரும் போதும் வயதான காலத்திலும் என் தாத்தா ,பாட்டி என்னை வரவேற்க விமான நிலையத்தில் காத்து நிற்பார்கள்.ஏர்போர்டில் அனைவரும் என்னை நலம் விசாரித்து கொண்டு இருக்க,என் தாத்தா மட்டும் என்னை அழைத்து சென்று உணவு வாங்கி தந்து சாப்பிட சொன்னார்கள் என் பசியை அறிந்து .இது போல் பல பல நிகழ்வுகள்.ஒரு முறை தீவிர மனவருத்தத்தில் இருந்த என்னை மாற்றுவதற்காக அந்த 75 வயதிலும் தேடி அலைந்து என்னக்கு பிடித்த திரைபடங்களாக பார்த்து பார்த்து வாங்கி வந்து குடுத்து என்னை வற்புறுத்தி பார்க்க வைத்தார்கள்.
என் தாத்தா என் பாட்டியை கவனித்து கொள்ளும் விதமே தனி.என் பாட்டியை உள்ளங்கையில் வைத்தல்லவா தாங்கினார்.என்னை பொறுத்தவரை ஒவ்வொரு கணவன் மனைவியும் என் தாத்தாவிடம் இருந்த அறிந்த கொள்ள வேண்டிய விஷயம் அவர்கள் நடத்திய இல்லறம் பற்றி.ஒரு நாள் என் பாட்டியை தனியாக விட மாட்டார்கள்.என் பாட்டியிடம் அதிர்ந்து கூட என் தாத்தா பேசியது இல்லை.இணை பிரியா பறவை அவர்கள் என்று சொன்னால் மிகை ஆகாது.
அது போல என்னிடமும் ,என் பாட்டியிடமும் பாசத்தை பொழிந்த என் தாத்தா சரியாக என் பிறந்த நாள் அன்று உடல்நிலை சரி இல்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டு அதற்கு அடுத்து நாள் எங்கள் எல்லோருக்கும் செய்தது போதும் என்று மேலுலகம் சென்று இறைவனுக்கு தொண்டாற்ற சென்று விட்டார்.எங்கள் அனைவரையும் மீளா துக்கத்தில் ஆழ்த்தி விட்டு சென்று விட்டார்.edu செய்யவே முடியாத இழப்பான இதில் இருந்து மீண்டு வர எங்களுக்கு எத்தனை காலங்கள் ஆகுமோ?