Thursday 1 November 2012

வேண்டாமே பூசணிக்காய் !!!

எத்தனையோ பதிவுகள் எழுதனும்னு நெனச்சு நேரம் இல்லாமையால் தள்ளி கொண்டே போகுது.
இது ரொம்ப நாளா நெனச்சிட்டு இருந்தது.இன்னிக்கு எழுதியே ஆகணும்னு முடிவு பண்ணியாச்சு.

ஒரு நாள் நான் எப்பொழுதும் புத்தகம் வாங்கற கடைக்கு போய் இருந்தேன்.புத்தகங்களை அலசி கொண்டு இருந்த போது என்னருகே இருந்தவர் தீடிர்னு மயக்கம் போட்டு கீழே விழுந்தார்.நானும் மற்றவர்களும் அவருக்கு முகத்தில் தண்ணீர் அடித்து மயக்கம் தெளிய வைத்தோம்.ஒரு 40 வயது இருக்கும் அவருக்கு.Sales Rep ஆக இருந்தவராம்.ஒரு விபத்துக்கு பிறகு சொந்தமாக சிறுதொழில் செய்வதாக சொன்னார்.

அவர் விபத்துக்கான காரணமே இந்த பதிவு எழுத தூண்டியது.சாலையில் இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது தெருவில் கிடந்த திர்ஷ்டி பூசனிக்காய் மேல் வண்டி ஏறி இவரும் வண்டியும் கீழ விழுந்ததில் அவருக்கு முதுகெலும்பில் பலத்த அடியாம்.டிஸ்க் ஏதோ இடம் நகர்ந்து விட்டதாம்.மருத்துவர்களால் ஓரளவுக்கு தான் சரி செய்ய முடிந்தது போக இப்பொழுது கைத்தடி வைத்து கொண்டு நடக்கிறார்(காலில் fracture வேறு).இப்படி தான் அடிக்கடி மயக்கம் வருமாம்.

பொதுவாக இந்த மக்களுக்கு அமாவாசை,ஆயுது பூஜை போன்ற நாட்கள் என்றல் அந்த பூசனிக்காய் உடைத்தால் தான் திருப்தி ஆகிறது.நான் அவங்க நம்பிக்கையை குறை கூற வில்லை.தாராளமா உடைங்க பா .ஆனா அத ரோடோராம உடைங்க .இல்ல உடைச்சிட்டு அத ஓரமா நகர்தியாவது  போடுங்க.நடுரோட்டுல போடு இருக்கும் மனுஷங்களா இம்சை படுத்தாதீங்க.இதனால உங்க திர்ஷ்டி போகுதோ இல்லையோ என்ன மாதிரி நெறைய பேரு கிட்ட வாங்கி கடிக்காம   இருப்பீங்க.

நாங்க முன்ன இருந்த அபார்ட்மென்ட் அருகே ஒரு குடும்பம் இருந்தது.அவர்கள் வீட்டில் ஒரு குழந்தை உண்டு.ஒவ்வொரு வெள்ளிகிழமையும் மறக்காம அந்த குழந்தைக்கு சூடம் ஏத்தி திர்ஷ்டி சுத்துவாங்க.நல்லது.ஆனா அத கரெக்டா எங்க வீடு வாசலுக்கு நேர தான் கொண்டு வந்து வைப்பாங்க  (எங்க வீட்டு வாசலும்,அவங்க வாசலும் அருகருகே ).பல நாள் பொறுத்து பார்த்து ஒரு நாள் கத்தி விட்டேன்.

இந்த மாதிரி மக்கள் தங்கள் நம்பிக்கைகளை மற்றவர்களுக்கு தொந்தரவு இல்லாமல் கடைபிடித்தால் நன்றாக இருக்கும்.


Tuesday 2 October 2012

என் தாத்தாவுக்காக ......

எத்தனையோ தம்பதிகளை பார்த்து இருக்கேன்,மனைவியை  சந்தேகம் படும் புருஷன் ,கணவனுடன் ஒத்து போகாத மனைவி என்று பல வகையினரை பார்த்து இருக்கேன்.எல்லா கணவன் மனைவிக்குள்ளும் எதோ ஒரு பிரச்னை இருக்கும் அது ஈகோ வோ,புரிந்துகொள்ளுதலோ என்று.அது போல எல்லா மனிதரிடமும் ஒரு சதவிகிதமாவது ஒரு தவறு இருக்கும்.

என் தாத்தாவுக்கு வயது 77 ,நான் பார்த்த வரை என் பாட்டியிடம் என் தாத்தா சண்டை போட்டதும் இல்லை,அதிர்ந்து பேசினதும் இல்லை.பொதுவாகவே அன்னைவரிடுமம் பாசமும்,பரிவுமாக இருப்பர்.என் பள்ளி விடுமுறை நாட்கள் அனைத்தும் என் தாத்தா,பாட்டியுடனே இருக்கும். பள்ளியின் கடைசி தேர்வு அன்றே என் தாத்தா வந்துடுவாங்க,என்ன ஊருக்கு கூட்டிட்டு போக.அப்பல்லாம் எங்க பாட்டி வீட்டுல  டிவி,புக்ஸ்,ரேடியோன்னு எந்த பொழுது போக்கு சாமான்களும் இருக்காது,இருந்த போதும் அந்த ஒரு மாதம் விடுமுறை கழிவதே தெரியாமல் அவ்ளோ சந்தோஷமாக இருப்பேன்.என் பள்ளி இறுதி ஆண்டு வரை விடுமுறை முடிந்து வரும் போதுலாம் அழுவேன் இன்னும் இருக்க முடியலையேனு.அதற்கு பிறகு நான் விருப்ப பட்டபடியே என் தாத்தா பாட்டியிடமே இருந்து நான் கல்லூரியில் படித்தேன்.நான் கல்லூரியில் கோல்ட் மெடலும்,distinction,best outgoing student  போன்ற அனைத்தையும் வாங்கினதற்கு காரணம்,என் தாத்தாவும் பாட்டியும் தான்.என் தாத்தா என்னை தினமும் காலையும் ,மாலையும் படிக்கச் சொல்லுவார்கள்.பரீட்சை நேரங்களில் விடியலில் எழுப்பி விடுவார்கள்(தாத்தா ஹெட் மாஸ்டர் இருந்தவங்க).அதே போல் பரீட்சை முடிந்ததும் என்னை வற்புறுத்தி தோழிகளுடன் திரைப்படம் பார்க்க அனுப்புவார்கள்.என் தாத்தா,பாட்டியிடம் இருந்து நான் அறிந்தது ஏராளம்.

என் திருமணத்தை நடத்தி வைத்ததும் என் தாத்தா பாட்டி தான்.நான் ஒவ்வொரு முறையும் வெளிநாடு சென்ற வரும் போதும் வயதான காலத்திலும் என் தாத்தா ,பாட்டி என்னை வரவேற்க விமான நிலையத்தில் காத்து நிற்பார்கள்.ஏர்போர்டில் அனைவரும் என்னை நலம் விசாரித்து கொண்டு இருக்க,என் தாத்தா மட்டும் என்னை அழைத்து சென்று உணவு வாங்கி தந்து சாப்பிட சொன்னார்கள் என் பசியை அறிந்து .இது போல் பல பல நிகழ்வுகள்.ஒரு முறை தீவிர மனவருத்தத்தில் இருந்த என்னை மாற்றுவதற்காக அந்த 75 வயதிலும் தேடி அலைந்து என்னக்கு பிடித்த திரைபடங்களாக பார்த்து பார்த்து வாங்கி வந்து குடுத்து என்னை வற்புறுத்தி பார்க்க வைத்தார்கள்.

என் தாத்தா என் பாட்டியை கவனித்து கொள்ளும் விதமே தனி.என் பாட்டியை உள்ளங்கையில் வைத்தல்லவா தாங்கினார்.என்னை பொறுத்தவரை ஒவ்வொரு கணவன் மனைவியும் என் தாத்தாவிடம் இருந்த அறிந்த கொள்ள வேண்டிய விஷயம் அவர்கள் நடத்திய இல்லறம் பற்றி.ஒரு நாள் என் பாட்டியை தனியாக விட மாட்டார்கள்.என் பாட்டியிடம் அதிர்ந்து கூட என் தாத்தா பேசியது இல்லை.இணை பிரியா பறவை அவர்கள் என்று சொன்னால் மிகை ஆகாது.

அது போல என்னிடமும் ,என் பாட்டியிடமும் பாசத்தை பொழிந்த என் தாத்தா சரியாக என் பிறந்த நாள் அன்று உடல்நிலை சரி இல்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டு அதற்கு அடுத்து நாள் எங்கள் எல்லோருக்கும் செய்தது போதும் என்று மேலுலகம் சென்று இறைவனுக்கு தொண்டாற்ற சென்று விட்டார்.எங்கள் அனைவரையும் மீளா துக்கத்தில் ஆழ்த்தி விட்டு சென்று விட்டார்.edu செய்யவே முடியாத இழப்பான இதில் இருந்து மீண்டு வர எங்களுக்கு எத்தனை காலங்கள் ஆகுமோ?




Sunday 9 September 2012

நான் கற்ற பாடம்

சென்ற வாரம் நாங்கள் காரில் சென்று கொண்டு இருந்த பொது எதிர்பாரத விதமாக ஒருவர் மீது இடித்து விட்டோம்,முழுவதும் எங்கள் தப்பு.கைகளில் சிராயபுடன்  இருந்த அவரிடம் மன்னிப்பு கேட்டும் மனது ஆறாததல்,அவரை அருகில் உள்ள மருத்தவமனைக்கு அழைத்து செல்ல முயன்றோம்.அவருடன் ஒரு கும்பல் சேர்ந்து கொண்டு என்னையும் ,குழந்தைகளையும்  இறங்க சொல்லி சத்தம் போட்டார்கள்,அவங்க போகனுமாம் காரில்.அடிபட்டவர் அழைத்து கொண்டு போவது சரி,அவர் கூட ஒரு படையே கிளம்பி வந்தால் எல்லோரும் போவதற்கு இது பஸ்ஆ ,என்னை எவனோ ஒருவன் கீழே இறங்கி தெருவில் நிற்க சொன்னதும் என்னக்கு கோவம் வந்துவிட்டது,சிறு தகராறுக்கு பின் அடிபட்டவரை  மருத்துவமனை அழைத்து சென்று முதல் உதவி செய்தோம்,பின்னாலே என்னோட சண்டை போட்டவங்க ஆட்டோ வில் வந்து சேர்ந்தார்கள்,மறுபடியும் மருத்துவமனையில் வைத்து அவர்களை காரில் அழைத்து வராததற்கு சண்டை.எனக்கோ  கோவம் அதிகமாகி கொண்டே இருந்தது,அடிபட்டவரை  பற்றி கவலை இல்லாமல்,என்ன ஜென்மங்கள் இவர்கள் என்று.அவர்களில் ஒருவர் மருத்துவரிடம் சென்று தோள்பட்டையில் வலி இருப்பதால் அடிபட்டவருக்கு  xray  எடுக்கணும் என்றார்.அடபாவிகளா,அந்த மருத்துவரும் xray  எடுக்க சொன்னார்.
அதற்குள் அவர்கள் யாரு யாருக்கோ அலைபேச தூள் படத்தில் வரும் சொர்ணக்கா போல ஒரு 20 பேர்  கொண்ட கும்பல் வந்துவிட்டது,வந்தவர்களிடம் கதை ,திரைகதை எழுதி நடந்த சம்பவங்கள் சொல்லபடுள்ளது.அவர்கள் படுக்கும் வசை மாறி பொழிந்தார்கள்.

XRAY ரிப்போர்ட் படி மருத்துவர் ஒன்றும் இல்லை போகலாம் என்று சொல்லி விட்டார்.இனி தான் ஆரம்பித்தது பேரம் எங்களிடம்.ஒருவர் எங்களிடம் வந்து புத்தூர் போய் கட்டு போட 5000 பணம் வேணும் என்று சண்டை போட ஆரம்ப்பித்து விட்டார்.மருத்துவர் XRAY இல் ஒன்னும் இல்லை என்று சொன்ன பிறகும் இந்த பேரம்.அடிபடவரின் மனைவி,இரு கல்லூரி வயது மகள்கள் அனைவரும் பேசாமல் இருக்க சுற்றி இருக்கும் கூட்டமோ பணம் பறிபத்திலே குறியாக இருந்தது.என்னால் பொறுத்து kollave   முடியவில்லை .என் கணவரோ எதுவும் பேசாமல் அடிபட்டவரிடம் 2000 ரூபாய் பணத்தை குடுத்துவிட்டு வந்தார்கள்.அட பதரே பணத்தை குடுத்ததும் அந்த கும்பலுக்கு முகமெல்லாம் பல்லாக ஒரே சந்தோசம்.என்ன ஒரு ஈன பிறவிகள்.

இதை நான் இங்கே கூறியதற்கு காரணம்,இது போல விபத்து ஏற்பட்டால் நாம் செய்ய வேண்டியது


  • முதலில் அடிபட்டவரை  அருகில் உள்ள  அரசு மருத்துவமனைக்கு  அழைத்து செல்ல வேண்டும்,அங்கு சிகிச்சையின் போதே காவல்துறைக்கு complaintum பதிவு செய்ய படுவதால் ,நமக்கு பிரச்னை குறையும்,எனக்கு ஏற்பட்டது போல் அசிங்க பட வேண்டாம்.
  • இல்லை என்றால் அடிபட்டவுடன் நீங்களே ஒரு குறிபிட்ட அளவுக்கு பணத்தை குடுத்து விடு அவர்களே மருத்துவரை பார்க்க சொல்லி விட்டு நாம் சென்று விடுவது.
  • அதுவும் இல்லை என்றால் இடித்த வுடன் நிற்காமல் சென்று விடுவது,அவர்கள் நம் வண்டி நம்பர் வைத்து நம்மை கண்டு பிடித்தாலும் நமக்கு குறைந்த பட்ச அபராத தொகையே அளிக்க படுமாம்(1500 முதல் 2000 வரை).உயிர் இழப்பு இல்லாதவரைக்கும் நமக்கு பிரச்னை இல்லை.மனிதாபிமானம் ,பாவம்,புண்ணியம் என்று நாம் யோசித்து கொண்டு இருந்தால் முட்டாள் ஆக்க படுவோம் என்பது உறுதி.



Tuesday 31 July 2012

Tshirt வாசகங்கள்

சமீப காலமாக வாசகங்கள் உள்ள tshirts  அணிவது ஒரு கலாச்சாரமாகவே மாறி விட்டது.சிலது எல்லை மீறி போனாலும் நான் கண்ட சில நல வாசகங்ககள்.

   If you have a single child
You are a MOM
if you have two childs
You are a REFREE

--------------------------

I was born Intelligent but education spoiled me

-------------------------

I am one of those bad things happen to good people.

--------------------------

Out of my mind,back in five minutes

--------------------------

I am not a complete Idiot-some parts are missing.

--------------------------

Do not disturb me - I am disturbed already

----------------------

Oh Crap!You are trying to cheer me up,arent you



Thursday 26 July 2012

என்னை பாதித்தவை

கடந்த இரண்டு வாரங்களாக மனம் அமைதியாகவே இல்லை.என் வாழ்வில் என்னை மிகவும் பாதித்த சம்பவம் என்றே சொல்லலாம்.என் மாமனார் எங்கள் வீட்டுக்கு வந்திருந்த பொது இறந்து விட்டார்.ஏற்கனவே ILD (Interstital Lung disease ) எனப்படும் நோயாள பாதிக்க பட்டிருந்த அவர் ஒரு மாலை பொழுதில் மாரடைப்பால் இறந்து விட்டார்.இன்னமும் எங்களால் அதில் இருந்து மீண்டு வர இயலவில்லை.ஊரில் இருந்து அனைத்து சடங்குகளும் முடித்து விட்டு வந்தோம்.
அந்த சோகத்தில் இருந்து மீள்வதற்கு முன்பே நேற்று எங்கள் பகுதியில் மற்றுமொரு துயர சம்பவம்.எங்கள் பகுதியில்  மிகவும் புகழ்பெற்ற அந்த பள்ளியின் பேருந்தில் இருந்த ஒரு ஓட்டையில் வழியாக விழுந்து ஸ்ருதி என்ற அந்த சிறுமி இறந்து விட்டாள்.பொதுவாகவே எங்கள் பகுதியில் நெறைய பாக்டரி galum ,பள்ளிகளும் உள்ளதால் மாலை மற்றும் இரவு நேரத்தில் போக்குவரத்துக்கு நெரிசல் இருக்கும் .அதற்கு முக்கிய காரணம் ரோடு அகலமாக இல்லாததாலும் சரியாக இல்லாததும்.
அது மட்டுமில்லாமல் பள்ளி பேருந்துகள் ஒரு குறிபிட்ட வேகத்திற்கு மேல் செல்ல கூடாது,பள்ளி பேருந்தை கடக்கும் மற்ற வாகனங்கள் கவனத்துடன் செல்ல வேண்டும் (குழந்தைகள் பஸ் ய் விட்டு இறங்குவது தெரியாமல் overtake செய்யும்   வாகனகள்) ,பேருந்தில் இருக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் seat பெல்ட் அவசியம்,பேருந்து நல்ல  நிலையில் இருத்தல் ,பேருந்தினுள் டிரைவர் அல்லாத வேறு ஒருவர் குழந்தைகளை பார்த்து கொள்ள இருத்தல்,அளவுக்கு அதிகமாக குழந்தைகளை ஒரே வண்டியில் ஏற்றி செல்லுதல் போன்றவை அரசாங்கத்தின் சட்ட திட்டங்களாக ஒவ்வொரு பள்ளிக்கும் சொல்ல படு அவை நடைமுறை படுத்த பட வேண்டும்.
இன்றைய செய்திகளில் இன்றே அனைத்து பள்ளிகளின் பேருந்துகளும் சோதனை செய்யப்படும் என்று அறிவித்தார்கள்.ஐயா,போன மாதம் இப்படி தான் மகி என்ற சிறுமி குழியில் விழுந்த வுடன் அனைத்து தெருக்களில் உள்ள குழிகளும் மூடப்படும் அல்லது எச்சரிக்கை பலகை வைக்க படும் நு சொன்னிங்க ,இப்படி  எதாவது விபத்து ஏற்பட்ட தான் புத்தி வருமா,இந்த மாதிரி உயிர் பலிகள் தொடரத்தான் வேணுமா?

என் மாமனார் மற்றும் ஸ்ருதி யின் ஆத்மா சாந்தி அடைய என்னுடைய பிராத்தனைகள்.

Wednesday 4 July 2012

குழந்தைகளை காப்போம்

சமீபத்தில் பல்லாவரத்தில் ஒரு தனியார் பள்ளியில் மூன்று வயது சிறுமி வாழைபழம் சாப்பிடும் பொது தொண்டையில் சிக்கி இறந்து போனாள்.நேற்று இது பத்தி என் பையன் பள்ளியில் மற்ற பெற்றோருடன் பேசி கொண்டு இருந்தேன்.அப்பொழுது சொல்லி வாய்த்த மாதிரி  எல்லா பெற்றோரும் கூறியது என் பிள்ளைக்கு நான் பொறுமையாக சாப்பிட  சொல்லி கொடுத்துள்ளேன்,பள்ளியில் ஆயா பார்த்து கொள்வார்கள்  என்று தான் கூறினார்கள்.எந்த தான் ப்ரௌமையாக சபிடலும் நமக்கே சில சமயம் தொண்டையில் மாட்டும் பொது இரண்டு ,மூன்று வயது குழந்தைக்கு என்ன தெரியும்.என் பையன் பள்ளியில் தெனமும் என்ன சாப்பாடு கொடுத்து அனுப்பனும் என்று அட்டவணை போடு கொடுத்துள்ளர்கள்.அதில் வாழைபழம்,சப்பாத்தி ,பிரட்  போன்றவையும் அடக்கம்.

இதோ இன்றைக்கு ஹைதராபாத் இல் daycare இல் விட பட்ட குழந்தை சாப்பிடும் போது வாயில் சப்பாத்தி அகப்பட்டு மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்து இருக்கிறது.இது போல சிறு குழந்தைகளை வைத்து பள்ளி நடத்துபவர்களுக்கு முறையாக நமது அரசாங்கம் முதல் உதவி பற்றி பயிற்சி அளிக்க  வேண்டும்.ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் மருத்துவர் வரும் வரையில் காத்திருக்காமல் அவர்களுக்கு முதல் உதவி அளிக்க  தெரிந்து இருக்க வேண்டும்.அரசாங்கம் பள்ளிகளுக்கு அனுமதி அளிக்கும் முன்பே ஆசிரியர்கள் முறையாக பயிற்சி பெற்று இருக்கிறர்களா  ,பள்ளிக்கூடம் பாதுகாப்பாக,காற்றோட்டமாக,வெள்ளிச்சம் ஆக இருக்கிறதா,சுகாதரம இருக்கிறதா போன்றவற்றை சோதித்த பிறகே அனுமதி அள்ளிக்க வேண்டும்.பெற்றோரும் பள்ளியில் சேர்க்கும் முன்பு இதை எல்லாம் பரிசோதித்தே பிள்ளைகளை சேர்க்க வேண்டும்.

பெற்றோர்கள் குழந்தைக்கு இது போன்ற உணவுகள் கொடுக்கும் போது அவற்றை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொடுத்து அனுப்ப வேண்டும்.நடந்து முடிந்த பின் மற்றவர்களை குறை கூருவதுற்கு பதில் நாமே எச்சரிகையாக இருந்து கொள்ள வேண்டியது தான்.

இதோ குழந்தைக்கு சாப்பாடு தொண்டையில் அகப்பட்டு மூச்சு திணறல் ஏற்பட்டால் நாம் செய வேண்டிய முதல் உதவி பற்றி ஒரு விளக்க காட்சி.
     

Monday 2 July 2012

மறந்தவையும் மறைந்தவையும்



நாம் சிறு வயதில் அனுபவித்த எத்தனையோ விஷயங்களை நம் குழந்தைகளால் அனுபவிக்க முடியவில்லை.இன்றைய குழந்தைகளுக்கு தொலைகாட்சி பார்க்கவும்,வீடியோ கேம்ஸ் விளையாடுவுமே பிடிக்கிறது.எங்கள் தெருவில் நெறைய குழந்தைகள் உள்ளார்கள்,அனால் ஒருவரை கூட வெளியே பார்க்க முடியாது.என் பள்ளி நாட்களில் நண்பர்களோடு தெருவில் கிரிக்கெட்,பட்டம் என்று நேரம் போவதே தெரியாமல் விளையாடி இருக்கிறேன்.என் அம்மா நேரம் ஆகிட்டது என்று கூறிய பிறகே மனமே இல்லாமல் வீடு திரும்புவேன்.சனி ,ஞாயிறுகளில் தெருவே கதி என்று கிடப்போம்.நாம் மறந்து போன சில விளைய்டுகளை பற்றி இங்கே பார்போம்.
பட்டம்
பழைய செய்தித்தாளோ  அல்லது கலர் காகிதமோ அதனை அழகாக வெட்டி ,நீண்ட வால் சேர்த்து ,அழகாக சூத்திரம் அமைத்து ,உறுதியான நூல் கட்டி நண்பர்களோடு போட்டி போட்டு கொண்டு மொட்டைமாடியிலோ அலது ஆதங்கரையிலோ பட்டம் விடும் அழகே தனி.சிலர் அதில் கண்ணாடி துகள்களை நொறுக்கு போட்டு மாஞ்ச தடவி விடுவர்.பட்டம் உயர பரக்க பரக்க நண்பர்களுக்குள் போட்டி நடக்கும்.யார் பட்டம் உயரே போகிறது என்று.வெறும் படத்தின் வாலில் தான் எதனை வகை.நீண்ட ஒற்றை வால்,மூணு நாலு வால்கள் ஒன்றாக சேர்த்து இணைத்து விடுவது,வலயங்கள் செய்து அதனை ஒன்றாக இணைத்து விடுவது அன்று.
பொங்கல் சமயத்தில் வரும் கரிநாள் (எ) காணும் பொங்கலில் ஆற்றங்கரையில் பெரியவர்கள் கும்மி,கபடி போன்ற விளையாட்டுகளில் எடுபட சிறுவர்கள் பட்டம் விடு கொண்டு இருப்பர்.