Sunday, 24 June 2012

யார் காரணம் ?

நாம் வலை மேய்ந்து கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் ஒரு பெற்றோர் கதறி அழுது கொண்டு இருப்பர்.
பிறந்த நாளே இறந்த நாளாகும் என்று கனவில் கூட நினைத்து பார்த்து இருக்க மாட்டார்கள்.

நான்கு நாட்களாக எப்படியும் உயிருடன் பிழைத்து விடுவாள் என்றே எண்ணி கொண்டு இருந்தேன்.மகி போல் வருடாவருடம் borewell குழிகளில் விழுந்து இருப்பவர் எண்ணிக்கை கூடி கொண்டே போகிறது.பத்திரிகைகளும்,ஊடகங்களும் இரண்டு நாட்களுக்கு பரபரப்பாக இதை பற்றி பேசும் ,எழுதும்.நம் அரசாங்கமும் எங்கெல்லாம் குழிகள் இருக்கிறதோ அதனை சுற்றி நாலு கம்பம் நட்டு அபாயம் என்று ஒரு ரிப்பன் சுற்றி வைக்கும்.ஒரே வாரத்தில் பழைய நிலைமைக்கு திரும்பி விடும்.

நம் வீட்டுக்கு அருகில் ஒரு குழி இருக்கிறது என்றல் நாம் என்ன செய்து இருக்க வேண்டும்.உடன் சமந்த பட்டவரிடும்  சென்று குழந்தைகள் விளையாடும் இடத்தில இது போன்ற குழிகளை திறந்து வைக்க வேண்டாம் என்று கூறி இருக்க வேண்டும்,இல்லையேல் குழந்தையை தனியே விளையாட விட்டு இருக்க கூடாது.என்னகேனமோ அந்த பெற்றோர்களின் அஜாகிரதயலே இந்த விபத்து ஏற்பட்டது என்று தோன்றுகிறது.வெளிநாடுகளில் உள்ளது போல் நம் சட்டங்கள் செயல்படுவது இல்லை,இங்கு உயிருக்கு முக்கியதுவுமம் கிடையாது.அப்படி இருக்கும் பொது இரவு 11  மணிக்கு ஒரு குழந்தை மற்ற குழந்தைகளுடன் பெரியவர்கள் மேற்பார்வை இல்லாமல் தனியாக விளையாடுகிறது என்றால்,இந்த விபத்து அல்ல வேறு வகையான பல விபத்துக்கள் ஏற்பட வாயிப்பு உள்ளது.

நம் நாடு இருக்கும் நிலைமையில் நம்மால் எல்லோரையும் திருத்த முடியாது ,திருந்தவும் மாற்றார்கள்.நம்மை நாமே காத்து கொள்வதை விட உயிர் வாழ வேறு வழி இல்லை.



Monday, 18 June 2012

ஐயோ PKG யா


சமீபத்தில் என் இரண்டரை வயது மகனை பள்ளியில் சேர்பதற்காக அருகே உள்ள பள்ளியை பார்க்க சென்று இருந்தேன்.
சுமாராக இருந்தது பள்ளிக்கூடம்.பள்ளியின் தலைமை ஆசிரியை எனிடம் பள்ளியை சுற்றி காண்பித்தார்.PKG  அறை பற்றி மிக பெருமையாக சொன்னார்.முழுவதும் AC செய்யபட்டுள்ளது என்று.Generator இல்லாத பட்சத்தில் AC வைத்து கொண்டு என்ன செய்ய போவதாக உத்தேசமோ தெரியவில்லை.
AC  இருப்பதால் அறை முழுவதும் அடைத்து போஸ்டர் ஒட்டி இருகிறார்கள் வேறு,கொஞ்சம் கூட வெளிச்சம் இல்லாமல்.

அடுத்து பாடம் பற்றிய பேச்சு வந்த போது CBSE syllabus அதனால் நான்கு புத்தகம் என்றார்கள்.பென்சில் கூட பிடிக்க தெரியாத குழந்தைக்கு நான்கு புத்தகமா?.எல்லாவற்றையும் இரண்டு வயதிலே கற்று கொண்டால் அடுத்த அடுத்த வருடத்தில் என்ன செய்ய போகிறார்கள் என்று என்னக்கு புரிய வில்லை.கடைசியாக ஒரு குண்டை தூக்கி போட்டார்கள்.வெறும் 25000  கட்டினால் போதுமாம்.அட கொடுமையே .இப்பொழுது சென்னையில் இரண்டு பிசினஸ் கோடி கட்டி பறக்கிறது.ஒன்று   ரியல் எஸ்டேட் ,மற்றொன்று பள்ளிக்கூடம் ஆரம்பிபத்து.இப்பொழுதெல்லாம் பள்ளி கட்டணம் ஆரம்பமே 25 அல்லது 30 ஆயிரம் என்கிறார்கள்.   எனக்கு தெரிந்து வெறும் LKG கு 60 முதல் 70 ஆயிரம் வாங்கும் பள்ளிகள் கூட இருக்கின்றன.கல்வி ஒரு  வியாபாரம்  ஆகிவிட்டது என்பதற்கு இதுவே ஒரு எடுத்துக்காட்டகின்றது.

தரமான பள்ளிகளை தேடி அலையும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்றே தோன்றுகிறது.


Sunday, 17 June 2012

இன்று முதல்

ரொம்ப நாட்களாக எண்ணத்திலே இருந்தது இன்று தான் செயலாக்கம் முடிந்தது.இதோ எனக்கே  எனக்கு  என்று ஒரு வலைபூ.என் எண்ணங்களையும் எழுத்துக்களையும்  இங்கு பதிவேற்ற போகிறேன் உங்கள் வாழ்த்துக்களுடன்.