Thursday, 26 July 2012

என்னை பாதித்தவை

கடந்த இரண்டு வாரங்களாக மனம் அமைதியாகவே இல்லை.என் வாழ்வில் என்னை மிகவும் பாதித்த சம்பவம் என்றே சொல்லலாம்.என் மாமனார் எங்கள் வீட்டுக்கு வந்திருந்த பொது இறந்து விட்டார்.ஏற்கனவே ILD (Interstital Lung disease ) எனப்படும் நோயாள பாதிக்க பட்டிருந்த அவர் ஒரு மாலை பொழுதில் மாரடைப்பால் இறந்து விட்டார்.இன்னமும் எங்களால் அதில் இருந்து மீண்டு வர இயலவில்லை.ஊரில் இருந்து அனைத்து சடங்குகளும் முடித்து விட்டு வந்தோம்.
அந்த சோகத்தில் இருந்து மீள்வதற்கு முன்பே நேற்று எங்கள் பகுதியில் மற்றுமொரு துயர சம்பவம்.எங்கள் பகுதியில்  மிகவும் புகழ்பெற்ற அந்த பள்ளியின் பேருந்தில் இருந்த ஒரு ஓட்டையில் வழியாக விழுந்து ஸ்ருதி என்ற அந்த சிறுமி இறந்து விட்டாள்.பொதுவாகவே எங்கள் பகுதியில் நெறைய பாக்டரி galum ,பள்ளிகளும் உள்ளதால் மாலை மற்றும் இரவு நேரத்தில் போக்குவரத்துக்கு நெரிசல் இருக்கும் .அதற்கு முக்கிய காரணம் ரோடு அகலமாக இல்லாததாலும் சரியாக இல்லாததும்.
அது மட்டுமில்லாமல் பள்ளி பேருந்துகள் ஒரு குறிபிட்ட வேகத்திற்கு மேல் செல்ல கூடாது,பள்ளி பேருந்தை கடக்கும் மற்ற வாகனங்கள் கவனத்துடன் செல்ல வேண்டும் (குழந்தைகள் பஸ் ய் விட்டு இறங்குவது தெரியாமல் overtake செய்யும்   வாகனகள்) ,பேருந்தில் இருக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் seat பெல்ட் அவசியம்,பேருந்து நல்ல  நிலையில் இருத்தல் ,பேருந்தினுள் டிரைவர் அல்லாத வேறு ஒருவர் குழந்தைகளை பார்த்து கொள்ள இருத்தல்,அளவுக்கு அதிகமாக குழந்தைகளை ஒரே வண்டியில் ஏற்றி செல்லுதல் போன்றவை அரசாங்கத்தின் சட்ட திட்டங்களாக ஒவ்வொரு பள்ளிக்கும் சொல்ல படு அவை நடைமுறை படுத்த பட வேண்டும்.
இன்றைய செய்திகளில் இன்றே அனைத்து பள்ளிகளின் பேருந்துகளும் சோதனை செய்யப்படும் என்று அறிவித்தார்கள்.ஐயா,போன மாதம் இப்படி தான் மகி என்ற சிறுமி குழியில் விழுந்த வுடன் அனைத்து தெருக்களில் உள்ள குழிகளும் மூடப்படும் அல்லது எச்சரிக்கை பலகை வைக்க படும் நு சொன்னிங்க ,இப்படி  எதாவது விபத்து ஏற்பட்ட தான் புத்தி வருமா,இந்த மாதிரி உயிர் பலிகள் தொடரத்தான் வேணுமா?

என் மாமனார் மற்றும் ஸ்ருதி யின் ஆத்மா சாந்தி அடைய என்னுடைய பிராத்தனைகள்.

4 comments:

  1. அடடா..... வருத்தமான செய்திகள்:(

    நம்ம ஊரில் மனித உயிர்களுக்கு மதிப்பொன்னும் இல்லை. அப்போ வருந்திட்டு மேலும் மேலும் அதே தப்பைச் செய்வாங்க.

    அந்த குழந்தைகள் ஸ்கூல் பஸ்ஸுக்கு வாரண்டி எப்படிக் கொடுத்தாங்க?

    வேர்டு வெரிஃபிகேஷனைத் தூக்குங்க. அப்பதான் யாராவது பின்னூட்டமிட வருவாங்க. நந்தி குறுக்கே கூடாது.

    ReplyDelete
  2. வருகைக்கும்,commentukum நன்றி teacher.
    நீங்க வார்ரன்ட்டி பத்தி கேட்கறீங்க?அந்த RDO அதிகாரி சொல்றாரு ,பஸ் பிளாட்போர்ம்லம் செக் பண்ணும் ரூல்ஸ் இல்ல வண்டி RC கு varappanu ?இத எங்க போய் சொல்ல?

    ReplyDelete